"ஜேஇஇ தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக மாணவர்கள் உள்ளீடு செய்ய அவசியமில்லை" - தேசிய தேர்வு முகமை
ஜே.இ.இ. விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்வதில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்துள்ளது.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வின் விண்ணப்பப்பதிவு, கடந்த 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், அதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் உள்ளீடு செய்ய கோரப்பட்டிருந்தது.
கொரோனாவால் தமிழ்நாட்டில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக மாணவர்கள் மதிப்பெண்களை உள்ளீடு செய்வதிலிருந்து, தேசிய தேர்வு முகமை விலக்களித்துள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் இந்த விலக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments